வவுனியாவில் தமிழக நிவாரண பொருட்கள் விநியோகம்

வவுனியாவுக்கு, இந்தியா தமிழகத்திலிருந்து வருகை தந்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. புகையிரதம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் இறக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இந்த நிவாரண பொருட்கள் முதற் கட்டமாக இன்று வருகை தந்துள்ளதாகவும், வவுனியா மாவட்ட செயலகம் மக்களுக்கான விநியோகத்துக்கு முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருச்செல்வம் திரேஷ்குமார் வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

கிராம சேவையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களூடாக பொருட்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அந்தந்த பகுதிகளில் மக்களுக்கான விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் அவர் எமக்கு தெரிவித்துள்ளார்.

புகையிரத நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள், கிராம சேவையாளர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட உடனே மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பங்களிப்போடு இந்த பொருட்கள் விநியோகம் நடைபெறுவதாக அறிய முடிகிறது.

வவுனியாவில் தமிழக நிவாரண பொருட்கள் விநியோகம்

Social Share

Leave a Reply