இந்த வருடம் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந் தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சசைகள் ஓக்டோபர் – நவம்பர் கால பகுதிக்கு பிற்போடப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், புலமை பரிசில் பரீட்சசை டிசம்பர் 22 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதிக்கு பின் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு அதிக பாடசாலை நாட்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் பாட விதானங்களை மாணவர்கள் பூர்த்தி செய்ய முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
