வெந்து தணிந்தது காடு கூட்டணியின் புதிய முயற்சி

தமிழில் முன்னணி நடிகரான சிம்பு நீண்ட இடைவெளியின் பின்னர் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அவரது மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

அவரது அடுத்தபடமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இயக்குநர் கௌதம் மேனனின் இயக்கத்தில் சென்னையில் நிறைவுபெற்று தற்போது மும்பையில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 2010ம் ஆண்டு வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா, மற்றும் 2016ம் ஆண்டின் அச்சம் என்பது மடைமையடா கூட்டணி மீண்டும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இத்திரைப்படங்களில் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், கௌதம் மேனன் மற்றும் தாமரை கூட்டணி இணைந்து பணியாற்றியிருந்தனர்.

நதிகளில் நீராடும் சூரியன் எனத் தலைப்பிடப்பட்டு வெந்து தணிந்தது காடு என மாற்றப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடிகை ராதிகா சிம்புவின் தாயாராக நடிப்பதுடன், கன்னடம் மற்றும் மலையாளத்தில் நடித்துவரும் இளம் நடிகையான கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நீண்ட இடைவெளியின் பின்னர் சிறந்த திரைக்கதையொன்றில் நடிக்கும் பொருட்டு இத் திரைப்படத்திற்காக சிலம்பரசன் 15 கிலோ உடல் எடை குறைத்துள்ளதுடன், வழக்கமாக கௌதம் மேனனின் காதல் கதைத்திரைப்படமாக அமையாமல் ஒரு வேறுபட்ட முயற்சியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திரைப்படத்தின் கதை வசனத்தினை ஜெயமோகன் எழுதியுள்ளதுடன் நடிகர் சிம்பு அசுரன் திரைப்படம் போன்ற ஒரு திரைக்கதையில் நடிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பலரின் எதிர்பார்ப்பிற்குரிய இக்கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதுடன், இக்கதை தமிழ்சினிமாவின் வேறுபட்ட கோணத்தில் அமையுமெனச் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு கூட்டணியின் புதிய முயற்சி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version