15 வயது சிறுமி துஸ்பிரயோகம் – தாயின் காதலன் கைது

15 வயது சிறுமி ஒருவரை பல தடவைகள் வன்புணர்வு செய்த 44 வயது நபர் ஒருவரை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவருடன் குடும்பம் நடாத்தி வரும் ஆண் ஒருவர், அந்த பெண்ணின் மகளையே இவ்வாறு துஸ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட நிலையில் கர்ப்பமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த சிறுமி மருத்துவ விசாரணை அதிகாரியிடம் மேலதிக சோதனைகளுக்காகவும், சிகிச்சைக்காகவும் கையளிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், வெல்லவாய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சிறுவர் மீதான துஸ்பிரயோகங்களும், சிறுமிகள் மீதனா வன்புணர்வு சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவை தொடர்பில் பெற்றோர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம். சமூகத்தில் உள்ள அனைவரும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

15 வயது சிறுமி துஸ்பிரயோகம் - தாயின் காதலன் கைது

Social Share

Leave a Reply