துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் துப்பாக்கி சூட்டு கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தங்காலை, மொட்டகெட்டியார பகுதியில் இன்று(05.06) மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்குள் நடைபெற்ற நான்காவது துப்பாக்கி சூட்டு சம்பவமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரங்களில் அசாதரண இறப்பு சம்பவங்கள், கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதேவேளை சிறுமிகள் மீதான துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலும் சில சம்பவங்கள் வெளிவந்துள்ளன.