எரிபொருள் வருவதால், வழங்குவோம் – அமைச்சர்.

நாளை(08.06) முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்புமென வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிலைவரம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்கும் போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக டீசல் 3200 மெற்றிக் தொன்னாகவும், பெற்றோல் 2800 மெற்றிக் தொன்னாகவும் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் எரிபொருள் கப்பல்கள் வருகை தந்துள்ளமையினால் நாளை முதல் டீசல் 5000 மெற்றிக் தொன்னும், பெற்றோல் 3500 மெற்றிக் தொன்னும்  சந்தைக்கு  விநியோகிக்க முடியுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் எரிபொருள் கப்பல்கள் இரண்டும், 16 ஆம் திகதி மேலுமொரு கப்பலும் வருகை தரவுள்ளதாகவும், சந்தைக்கு தேவையான எரிபொருள் விநியோகம் செய்ய முடியுமெனவும் அமைசசர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இன்று காலை எரிபொருளை கட்டுப்பாடாக பாவிக்குமாறும், அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருள் இறுக்க நிலை காணபப்டுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எரிபொருள், சமையல் எரிவாயு என்பனவற்றை அளவுக்கு அதிகமாக சேமித்து வைக்க வேண்டாமெனவும், தூர பயணங்களை தவிர்த்து சிக்கனமாக பாவிக்குமாறும் மக்களுக்கு அறிவித்துள்ளார்.

எரிபொருள் வருவதால், வழங்குவோம் - அமைச்சர்.

Social Share

Leave a Reply