SL v AUS – இலங்கை ஒரு நாள் தொடர் அணி

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21 பேரடங்கிய குழுவினை தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது. ஐந்து போட்டிகள் என்ற காரணத்தினால் 21 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வழமையான அணியாகவே இந்த அணி அமைந்துள்ளது.

பானுக்க ராஜபக்ஷ மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். 20-20 அணியில் இடம்பிடித்துள்ள மதீஷ பத்திரன அணியில் சேர்க்கப்படவில்லை. தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்பலாம்.

இம்மாதம் 14, 16 ஆம் திகதிகளில் பல்லேகல மைதானத்திலும், 19,21,24 ஆம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும்நடைபெறவுள்ளன.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளடங்கிய 20-20 போட்டி தொடரில் அவுஸ்திரேலியா அணி 2- 0 என முன்னிலை பெற்றுள்ளது.

அணி விபரம்

01) தசுன் ஷானக – தலைவர்
02) பத்தும் நிஸ்ஸங்க
03) தனுஷ்க குணதிலக்க
04) குசல் மென்டிஸ்
05) சரித் அசலங்க
06) தனஞ்சய டி சில்வா
07) தினேஷ் சந்திமால்
08) பானுக ராஜபக்ஷ
09) நிரோஷன் டிக்வெல்ல
10) வனிந்து ஹசரங்க
11) சமிக்க கருணாரட்ன
12) துஷ்மந்த சமீர
13) அசித்த பெர்னாண்டோ
14) நுவான் துஷார
15)ரமேஷ் மென்டிஸ்
16) மகேஷ் தீக்ஷனா
17) பிரவீன் ஜெயவிக்ரம
18) ஜெஃப்ரி வண்டர்சே
19) லஹிரு மதுஷங்க
20) துனித் வெல்லலகே
21) பிரமோத் மதுஷன்

SL v AUS - இலங்கை ஒரு நாள் தொடர் அணி
Photo Credit – SLC FB page

Social Share

Leave a Reply