இந்தியாவுக்கு அதிரடி

இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி இலகுவாக வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

149 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 18.2 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்று 04 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்காக அணியில் சேர்க்கப்பட்ட எய்ன்ரிச் க்ளாஸன் அதிரடியாக துடுப்பாடி 81(46) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். ரெம்பா பவுமா 35 ஓட்டங்களை பெற்றார். புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு ஆரம்ப விக்கெட்களை வீழ்த்தினார். அவர் 4 விக்கெட்களையும், யுஸ்வேந்திரா சஹால், ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.
ஷ்ரேயாஸ் ஐயர் 40 ஒட்டங்களையும், இஷன் கிஷன் 34 ஓட்டங்களையும், பெற்றனர். டினேஷ் கார்த்திக் ஆட்டமிழ்க்காமல் 29 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் அன்றிச் நோக்யா இரண்டு விக்கெட்களையும், கிகிஸோ றபாடா , வெய்ன் பார்னல், , கேஷவ் மஹாராஜ், டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

Social Share

Leave a Reply