மத்தள விமான நிலையம் தொடர்ச்சியான நட்டத்தில் செல்வதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த நட்டத்தை ஈடு செய்து அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி நகர்த்தி செல்வதற்காக தனியார், அரச கூட்டு திட்டத்தை உருவாக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையம் மாதாந்தம் 1 கோடி ரூபா நட்டத்தில் இயங்குவதாகவும், கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே மத்தள விமான நிலைய நட்டம் ஈடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலைய நிர்மாண பனிக்களுக்காக சீனாவிடம் பெற்றுக் கொண்ட கடன்களில் 210 மில்லியன் டொலர்கள் செலுத்தவேண்டிய நிலுவையிலுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.