பெற்றோலுக்கான கடன் உத்தரவாத கடிதம் வழங்கப்பட்டது.

பெற்றோல் கொள்வனவு செய்வதற்கான கடன் உத்தரவாத கடிதம் இன்று மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 300,000 பரல்கள் 92 ரக பெற்றோல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. 42.6 மில்லியயன் டொலர்கள் பெறுமதியான தொகைக்கு இந்த கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் விரைவாக வழங்கப்பட்டால், இந்த வார இறுதியில் பெற்றோல் சந்தைக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர நேற்று தெரிவித்திருந்தார்.

எரிபொருள் கோரி பல இடங்களிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வாகன போக்குவரத்துகள் இன்று மிகவும் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றன.

பெற்றோலுக்கான கடன் உத்தரவாத கடிதம் வழங்கப்பட்டது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version