திருகோணமலை, புல்மோட்டையில் குடும்பஸ்தர் அடித்து கொலை

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் புல்மோட்டை- அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஏ.ஜீ.சதாம் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் அடித்து கொள்ளப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (20.06) உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் தாக்கியதிலேயே இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் தெரியவருகின்றது. இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்தவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை, புல்மோட்டையில் குடும்பஸ்தர் அடித்து கொலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version