வவுனியாவில் கரடியின் தாக்குதலிற்கு இலக்காகி பொலிஸ் சாஜன்ட் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, புளியங்குளம், கல்மடு காட்டுப்பகுதியில் இடம் பெற்றுவரும் மரக்கடத்தலினை முறியடிக்கும் நோக்கில் பொலிஸ் சாஜன்ட் தலைமையிலான குழு காட்டு பகுதிக்கு சென்ற வேளையிலேயே கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய சாஜன்ட் ஆன ரனசிங்க என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
