தம்மிக்க பெரேராவுக்கு சாதகமான தீர்ப்பு

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை சட்ட விரோதமானதென மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்திருந்தது. மேலும் பலரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மூவரடங்கிய நீதிபதி குழு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொளவதில்லையென தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்று(21.06) தம்மிக்க பெரேரா பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து பதவியினை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், நேற்று நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே தான் பதவியினை பொறுப்பேற்பதாக தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இன்று அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் நாளை பதவியேற்கவுள்ளார்.

தம்மிக்க பெரேராவுக்கு சாதகமான தீர்ப்பு

Social Share

Leave a Reply