எரிபொருள் மற்றும் எரிவாயுக்களின் விலை மேலும் அதிகரிக்கப்படவேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ரஸ்சியா – யுக்ரைன் யுத்தம் காரணமாக இந்த விலையேற்றம் நடைபெறுவதாகவும், தங்கள் கைகளில் எதுவுமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலைக்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பிலான விபரங்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தி உரையாற்றுகையிலேயே இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
ரஸ்சியா, ஐரோப்பியாவுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயுவினை வழங்குவதனை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் 30 தொடக்கம் 40 சதவீதம் விலை அதிகரிப்பு ஏற்பட்டும் நிலை காணப்படுகிறது. இலங்கை, இந்த விலையேற்றங்களுக்கு ஈடுகொடுக்க மேலும் 500 மில்லியன் அளவிலான டொலர்கள் தேவைப்படுமென ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
