நாளை(24.06) 40,000 மெற்றிக் தொன் பெற்றோலை தாங்கிய கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர உறுதி செய்துள்ளார். புதிய விநியோகஸ்த்தரிடமிருந்து இந்த பெற்றோல் தொகை வருகை வருவதாகவும், கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் வரிசையினை கருத்திற் கொண்டு பெற்றோல் வருகை தந்த உடனே இறக்கப்பட்டு, விநியோகம் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் காஞ்சனா மேலும் தெரிவித்துள்ளார்.
