IMF இலங்கை பயணத்தை நிறைவு செய்தது.

இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட கடன் திட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாகவும், நல்ல முறையில் அமைந்ததாககவும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி, பிரதமர், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகரிகள், பொது நிறுவன அலுவலர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள், அபிரிவிருத்தி பங்காளர்கள் என பல தரப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் IMF அறிவித்துள்ளது.

இலங்கைக்கான கடன்களை வழங்குவது மற்றும் கடன்களை மீள அமைப்பது தொடர்பான விடயங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று அதிகார சபையின் அனுமதி அவசியம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதர சிக்கல் நிலையினை தீர்ப்பதற்கு உடனடியாக வரி சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் எனவும், அதன் மூலமாக இலங்கைக்கான கடன் வழங்குநர்களிடமிருந்து உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 2022 இல் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பணவீக்கம் அதிகமாகவும் உயரும். வெளிநாட்டு கையிருப்பு மிகக் குறைந்தளவில் இருப்பது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை செய்ய முடியாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

நேரடியான கள விஜங்களின் போது, ​​இலங்கை மக்கள், விசேடமாக வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஏழைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இந்த இக்கட்டான நேரத்தில், IMF விதிமுறைகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான உறுதியை வழங்குவதாக IMF இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத ஆரம்ப காலத்திலிருந்து, இலங்கையின் பொருளாதரா சிக்கல் நிலையினை சீர்செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், IMF குழு மற்றும் இலங்கை அதிகாரிகள் மட்ட வேலைத்திட்டங்கள், உயர் மட்ட பொருளாதர மீள் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் திருப்தியளிப்பதாகவும், IMF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கடன்கள் நிலையில்லாமல் காணப்படுவதனால் சர்வதேச நாணய நிதிய குழுவின் இணையவழி கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு அலுவலக மட்ட ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படுமெனவும் கூறப்பட்டுள்ள அதேவேளை, இவற்றை மீள நடைமுறைப்படுத்த பணிப்பாளர் சபை அனுமதி அவசியம் என கூறப்பட்டுள்ளது.

IMF இலங்கை பயணத்தை நிறைவு செய்தது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version