முல்லைத்தீவு மாணவிகள் துஸ்பிரயோகத்துக்கு கண்டன போராட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலரை தேடி பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயற்ப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நகர் பகுதியில் இன்று காலை பத்து மணிக்கு பெண்கள் பலர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை தங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாக கூடாது எனவும் இவருக்கு வழங்கும் அதிகபட்ச தண்டனையானது, இனி இவ்வாறு ஒருவர் செய்ய எண்ணாதளவில் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாணவிகள் துஸ்பிரயோகத்துக்கு கண்டன போராட்டம்.

Social Share

Leave a Reply