கொலை சந்தேக நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

கொழும்பு பஸ்தியான் மாவத்தையில் இரு நபர்களை கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொன்ற சந்தேக நபர் இன்று அதிகாலை 4 மணிக்கு கம்பஹா, பெம்முல்ல பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கும், குறித்த நபருக்குமிடையில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றங்களுக்கான முக்கிய நபர்களில் ஒருவரான “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பொலிசார் கைது செய்ய சென்ற வேளையில், மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றவர், துரத்தி சென்ற பொலிசார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அதன் போதே பொலிசார் மீண்டும் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொலை சந்தேக நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

Social Share

Leave a Reply