இன்று(09.07) அவசர கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தான் அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு பிரதமருக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச “ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டுள்ள இந்த கூட்டத்துக்கு” தாம் செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாக ஜனாதிபதி தனக்கு தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.