ஜனாதிபதி, பிரதமர், அராசாங்கம் உடனடியாக பதவி விலகவேண்டும்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென மும்மத தலைவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

இன்றைய போராட்டமுமும், கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களும் வெற்றியளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டுக்கு ஏற்ற, நாட்டை முன்னெடுத்து செல்ல ஏற்ற ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டுமெனவும், அவ்வாறான ஒருவர் இல்லையென்றால் பொது அமைப்புகளிலிருந்து ஒருவரை நியமித்து நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டுமென மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களின் விருப்பத்தின் படி வந்தவர் இல்லை. ஆகவே அவர் தொடர்ந்தும் பிரதமராக தொடர முடியாது. எனவே அவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனவும், அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமெனவும் மத தலைவர்கள் அனைத்து மக்களுக்கும் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர், அராசாங்கம் உடனடியாக பதவி விலகவேண்டும்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version