பொலிஸ் காட்டு மிராண்டித்தன தாக்குதல். மேலும் இரு ஊடகவியாளர்கள் வைத்தியசாலையில்

நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நடாத்தப்பட்ட தாக்குதலில் மொத்தமாக ஆறு ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக காயமைடந்த இருவரில், காளிமுத்து சந்திரன் எனும் ஊடகவியலாளரது கை முறியும் வரை தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரைப்படையின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகேயின் வழி நடத்தலிலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக நியூஸ் பெஸ்ட் தெரிவித்துள்ளது.

“இந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோருவதாக அறிவித்துவிட்டு இருக்க வேண்டாமெனவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்” பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நியூஸ் பெஸ்ட் தொலைக்காட்சியினூடாக அறிவித்துள்ளது.

“பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரும் இந்த செயலை பார்த்துவிட்டு இருக்கப்போகிறார்களா அல்லது, நடவடிக்கை எடுப்பார்களா எனவும், பொலிஸ் மா அதிபரின் ஆதரவுடனான இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

“கொழும்பு வைத்தியசாலையில் நாம் நிராயுத பாணிகளாக நிற்கிறோம். முடிந்தால் உங்களது பட்டன் போல் மற்றும் ஆயுதங்களை வைத்து விட்டு நேரடியாக வாருங்கள். இந்த பிரச்சினை தொடர்பில் முடிவு காணலாம்” என நியூஸ் பெஸ்ட் செய்தி சேவையின் பணிப்பாளர் செவான் டானியல் தாக்குதலுக்கு காரணமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு சவால் விடுத்துள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொள்ள காரணமாக இருந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற வைப்போம் எனவும், அதற்கு தயாராக இருக்குமாறும் நியூஸ் பெஸ்ட் தொலைகாட்சி மூலம் சவால் விடுத்துள்ளனர்.

——

இன்று மாலை பகுதியில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் வீட்டின் முன்னாள் நடைபெறும் போராட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் நால்வர் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் ஊடகவியலாளர்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரைப்படையினர் இந்த தாக்குதலை மேற்கொள்ளும் காட்சி தொலைக்காட்சியினூடக நேரலையாக ஒளிபரப்பானது.

படப்பிடிப்பாளர் நிலத்தில் வீழ்த்தப்பட்டு மிகவும் மோசமாகவும், கடுமையயாகவும் பட்டன் போலினால் அடிக்கப்பட்டுள்ளனர். நியுஸ் பெஸ்ட் ஊடகவியாளர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளது.

நேரலை காட்சிகளின் போது “நீங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்துள்ளீர்கள். இனி காணும், செல்லுங்கள்” என்று கூறியே தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்தோடு அவர்கள் நாலாவரும் துரத்தி, துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். நல்லவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் காட்டு மிராண்டித்தன தாக்குதல். மேலும் இரு ஊடகவியாளர்கள்  வைத்தியசாலையில்

Social Share

Leave a Reply