இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியான 20-20 போட்டி நொட்டிங்ஹம் இல் முடிவடைந்தது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அந்த 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்றது. இதில் டேவிட் மலான் 77(39) ஓட்டங்களையும், லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 42(29) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அவேஷ் கான், ரவி பிஷ்ணோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. இதில் சூரியகுமார் யாதவ் 117(55) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 28(23) ஓட்டங்களையும் பெற்றனர். இது சூரியகுமார் யாதவின் முதலாவது சதமாகும். இந்தியா அணிக்காக பெறப்பட்ட ஐந்தாவது சதமாகும். பந்துவீச்சில் ரீஸ் டொப்லீ 3 விக்கெட்களையும், டேவிட் வில்லி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்
இந்தியா அணி மூன்று போட்டிகளடங்கிய தொடரை 2-1 என வெற்றி பெற்றுள்ளது.