லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்புக்கும், கொழும்பை அண்மித்த பகுதிகளில் இன்று(11.07) விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 13 ஆம் திகதி முதல் வெளி மாவட்டங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 kg லிற்றோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை கொழும்பில் 4910 ரூபா எனவும், அதற்கு அதிகமாக விலை கொடுத்து வாங்க வேண்டாமென லிற்றோ நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மூலமாகவே விநியோகம் நடைபெறும் எனவும், பதுக்கல்களை தடுக்க மே மாத மின்சார பட்டியலை வழங்கி வாயுவினை பெற்றுக் கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் மேலும் லிற்றோ நிறுவனம் கோரிக்கை முன் வைத்துள்ளது.
விநியோக இடங்கள் தொடர்பில் தமது இணைதளத்தின் ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தக்வல்கள் வெளியிடப்படுமென லிற்றோ நிறுவனம் கூறியுள்ளது.
