(ச.விமல் – காலி சர்வதேச மைதானத்திலிருத்து)
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவடைந்துள்ளது. தமது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடி வரும் இலங்கை அணி 11.5 ஓவர்களில் 01 விக்கெட்டை இழந்து 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.
02 விக்கெட்கள் இழப்பிற்கு 24 ஓட்டங்கள் என்ற நிலையில் இன்று காலை துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 90.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பிரபாத் ஜெயசூரியாவின் மிக அபாரமான பந்துவீச்சு பாகிஸ்தான் அணியின் விக்கெட்களை கைப்பற்றியது. தொடர்ச்சியான மூன்றாவது 5 விக்கெட் பெறுதியாக அவருக்கு இது அமைந்துள்ளது.
இலங்கை அணி சார்பாக அறிமுக வீரர் ஒருவர் மூன்று இன்னிங்சிலும் 5 விக்கட்களை கைப்பற்றியது இதுவே முதற் தடவையாகும். இலங்கை அணி சார்பாக முரளிதரன், ரங்கன ஹேரத் ஆகியோர் மட்டுமே மூன்று இன்னிங்சில் தொடர்ச்சியாக ஐந்து விக்க்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள்.
பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் நிதானமாக தனித்து நின்று போராடி தனது ஏழாவது சதத்தை பூர்த்தி செய்தார். நேற்று இலங்கை அணியின் துடுப்பாட்டம் போலவே பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டமும் அமைந்தது. முன் வரிசை வீரர்கள் ஆட்டமிழக்க, டினேஷ் சந்திமாலுடன் பின்வரிசை வீரர்கள் கைகொடுத்து ஓட்டங்களை பெற்றனர். இன்று பாபர் அசாமுடன் பின் வரிசை வீரர்கள் கைகொடுக்க இந்த ஓட்ட எண்ணிக்கை கிடைத்துள்ளது.
இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் நிதானம் காத்து துடுப்பாடி ஓட்டங்களை பெறவேண்டும். பெரியளவிலான ஓட்ட வித்தியாசம் இல்லாத காரணத்தினால் இரண்டாம் இன்னிங்சில் பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றாலே வெற்றியினை நோக்கி நகர முடியும்.
ஸ்கோர் விபரம்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 | |
| 1 | ஓஷட பெர்னாண்டோ | 17 | 35 | 3 | 0 | ||
| 2 | திமுத் கருணாரட்ண | 16 | 29 | 2 | 0 | ||
| 3 | கசுன் ரஜித | 03 | 07 | 0 | 0 | ||
| 4 | குசல் மென்டிஸ் | ||||||
| 5 | அஞ்சலோ மத்யூஸ் | ||||||
| 6 | தினேஷ் சந்திமல் | ||||||
| 7 | தனஞ்சய டி சில்வா | ||||||
| 8 | நிரோஷன் டிக்வெல்ல | ||||||
| 9 | ரமேஷ் மென்டிஸ் | ||||||
| 10 | பிரபாத் ஜயசூரிய | ||||||
| 11 | மகேஷ் தீக்ஷண | ||||||
| உதிரிகள் | 00 | ||||||
| ஓவர் 11.5 | விக்கெட் – 01 | மொத்தம் | 36 | ||||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | ஷஹீன் ஷா அப்ரிடி | 04 | 01 | 16 | 00 |
| 2 | நசீம் ஷா | 05 | 00 | 12 | 01 |
| 3 | அகா சல்மான் | 2.5 | 01 | 08 | 00 |
| 4 | |||||
| 5 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபிக் | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 13 | 47 | 2 | 0 |
| இமாம்-உல்-ஹக் | L.B.W | கசுன் ரஜித | 02 | 16 | 0 | 0 |
| அசார் அலி | பிரபாத் ஜயசூரிய | 03 | 38 | 0 | 0 | |
| பாபர் அசாம் | L.B.W | மகேஷ் தீக்ஷண | 119 | 244 | 11 | 2 |
| மொஹமட் ரிஸ்வான் | பிடி – சந்திமால் | ரமேஷ் மென்டிஸ் | 19 | 35 | 3 | 0 |
| அகா சல்மான் | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 05 | 15 | 1 | 0 |
| மொஹமட் நவாஸ் | பிடி – சந்திமால் | பிரபாத் ஜயசூரிய | 05 | 18 | 0 | 0 |
| ஷஹீன் ஷா அப்ரிடி | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 00 | 01 | 0 | 0 |
| யசிர் ஷா | பிடி – தனஞ்சய | மகேஷ் தீக்ஷண | 12 | 32 | 0 | 0 |
| ஹசன் அலி | பிடி – சந்திமால் | ரமேஷ் மென்டிஸ் | 17 | 21 | 0 | 2 |
| நசீம் ஷா | 05 | 42 | 0 | 0 | ||
| 12 | ||||||
| ஓவர் 90.5 | விக்கெட் – 10 | மொத்தம் | 218 | |||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | கசுன் ரஜித | 11 | 02 | 42 | 01 |
| 2 | மகேஷ் தீக்ஷண | 25.5 | 06 | 68 | 02 |
| 3 | பிரபாத் ஜயசூரிய | 39 | 10 | 82 | 05 |
| 4 | ரமேஷ் மென்டிஸ் | 13 | 02 | 18 | 02 |
| 5 | தனஞ்சய டி சில்வா | 02 | 00 | 02 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 | |
| 1 | ஓஷட பெர்னாண்டோ | பிடி – ரிஷ்வான் | ஹசன் அலி | 35 | 49 | 5 | 0 |
| 2 | திமுத் கருணாரட்ண | Bowled | ஷஹீன் அப்ரிடி | 01 | 07 | 0 | 0 |
| 3 | குசல் மென்டிஸ் | பிடி – ரிஷ்வான் | யாசிர் ஷா | 21 | 35 | 3 | 0 |
| 4 | அஞ்சலோ மத்யூஸ் | பிடி – நஸீம் ஷா | யாசிர் ஷா | 0 | 15 | 0 | 0 |
| 5 | தினேஷ் சந்திமல் | பிடி – யாசிர் ஷா | ஹசன் அலி | 76 | 115 | 10 | 1 |
| 6 | தனஞ்சய டி சில்வா | Bowled | ஷஹீன் அப்ரிடி | 14 | 28 | 2 | 0 |
| 7 | நிரோஷன் டிக்வெல்ல | பிடி – சல்மான் | ஷஹீன் அப்ரிடி | 04 | 04 | 1 | 0 |
| 8 | ரமேஷ் மென்டிஸ் | பிடி – ரிஷ்வான் | நசீம் ஷா | 11 | 41 | 1 | 0 |
| 9 | பிரபாத் ஜயசூரிய | L.B.W | மொஹமட் நவாஸ் | 03 | 09 | 0 | 0 |
| 10 | மகேஷ் தீக்ஷண | பிடி – ரிஷ்வான் | ஷஹீன் அப்ரிடி | 38 | 65 | 4 | 1 |
| 11 | கசுன் ரஜித | 12 | 32 | 1 | 0 | ||
| உதிரிகள் | 07 | ||||||
| ஓவர் 66.1 | விக்கெட் – 10 | மொத்தம் | 222 | ||||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | ஷஹீன் ஷா அப்ரிடி | 14.1 | 03 | 58 | 04 |
| 2 | ஹசன் அலி | 12 | 02 | 23 | 02 |
| 3 | நசீம் ஷா | 13 | 04 | 53 | 01 |
| 4 | யாசிர் ஷா | 21 | 04 | 66 | 02 |
| 5 | மொஹமட் நவாஸ் | 06 | 02 | 18 | 01 |
