லங்கா ப்ரீமியர் லீக் பிற்போடப்பட்டது

லங்கா ப்ரீமியர் லீக் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர மற்றும் எரிபொருள் நிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக மேலும் அறிவித்துள்ளது. போட்டி ஏற்பாட்டு நிறுவனம் இந்த கோரிக்கையினை முன்வைத்ததனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பித்து 24 ஆம் திகதி நிறைவடைவதாக இருந்தது. அதன் பின்னர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன. இவ்வாறான நிலையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நிறைவடையும் வரை லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறும் சாத்திய கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

லங்கா ப்ரீமியர் லீக் பிற்போடப்பட்டது

Social Share

Leave a Reply