பாரளுமன்ற கூட்ட தொடரை ஜனாதிபதி ஆரம்பித்தார்.

இன்று பாரளுமன்றத்தின் மூன்றாவது கூட்ட தொடர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை பாரளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனை தொடர்ந்து பிரதமர் சபாநாயகர், பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் வருகை தந்த அதேவேளை, ஜனாதிபதியினை வரவேற்றனர்.

சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவேற்கப்பட்டார். வழமையாக நடைபெறும் மரியாதை வேட்டுக்கள் மற்றும் அநாவசிய செலவனினங்கள் இன்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதிக்கான பிரத்தியோக கொடி ஏற்றப்படவில்லை. இலங்கை தேசிய கொடி மட்டுமே ஏற்றப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கிராசனத்தில் அமர்ந்து எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கொள்கையுரையாற்றினார். அதன் போதும் ஜனாதிபதிக்கான பிரத்தியோக சின்னம் பயன்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் சபாநயாகர் கூட்ட தொடரை ஒத்தி வைத்தார்.

பாரளுமன்ற கூட்ட தொடரை ஜனாதிபதி ஆரம்பித்தார்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version