சிம்பாவே தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் இன்று (22/08) ஹராரேயில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி இந்த போட்டியினையும் வெற்றி பெற்று தொடரை 3-0 என தொடரையும் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சயில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது. இதில் சுப்மன் கில் 130(97) ஓட்டங்களையும், இஷான் கிஷன் 50(61) ஓட்டங்களையும், ஷிகர் தவான் 40(68) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரட் இவன்ஸ் 5 விக்கெட்களையும், லுகே ஜொங்வ், விக்டர் நியௌச்சீ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

சுப்மன் கில் அவரது முதலாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 276 ஓட்டங்களை பெற்றது. இதில் சிகந்தர் ரசா 115(95) ஓட்டங்களையும், சீன் வில்லியம்ஸ் 45(46) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அவேஷ் கான் 3 விக்கெட்களையும், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

சிகந்தர் ரசா அவரது ஆறாவது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.

இந்தியா அணி 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் சுப்மன் கில் தெரிவு செய்யப்பட்டார்.

சிம்பாவே தொடரை வென்றது இந்தியா

Social Share

Leave a Reply