அரச சேவைகள் உடனடியாக முழுமையாக வழமைக்கு திரும்புவதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் சகல அரச திணைக்களங்களுக்கும் இந்த அறிவிப்பை சுற்றறிக்கை மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
அதனடிப்படையில் நாளை(24.08) ஆம் திகதி முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அரச சேவைகள் முழுமையாக நாளை முதல் வழமைக்கு திரும்புகின்றன.
அரச திணைக்களங்களது மக்களுக்கான சேவைகளும் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.