சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும், இலங்கை மத்திய வங்கி ஆளுனருக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள், இலங்கை மத்திய வங்கியில் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளன.
சர்வதேச நாணய பிரதிநிதிகள் இன்று இலங்கையை வந்தடைந்த நிலையில் அவர்க்ளுடனான பேசசுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. பேச்சுவார்த்தைகள் நிறைவில் சர்வதேச நாணய நிதியத்துக்கும், இலங்கை அதிகாரிகளுக்குமிடையிலான அலுவலக மட்ட ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என நம்பப்படுகிறது. இவ்வாறனா நிலையில் ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இம்மாதம் 31 ஆம் திகதி வரை பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.