நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை(26.08) அல்லது, திங்கட்கிழமை விடுவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று நீதிமன்றத்திடமும், நீதித்துறையிடம் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கோரியுள்ளார். அத்தோடு ஜனாதிபதி பொது மன்னிப்பு கடிதத்திலும் ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இவ்வாறான நிலையிலேயே அமைசர் ஹரின் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி