நல்லெண்ண தூதராக ரஞ்சன் !

உலகளவில் இருக்கும் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனை மேம்படுத்துவதற்கான நல்லெண்ண தூதராக நடிகரும்,அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நியமித்துள்ளார்.

பாராளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் 4 வருடங்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க 1 வருடமும் 7 மாதங்களும் சிறை தண்டனையை கடந்து இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

மேலும்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரான மனுஷ நாணயக்கார சிறைச்சாலைக்கு சென்று அவரை வெளியில் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version