இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து விதமான எரிபொருட்களையும் எந்தவித தடைகளுமின்றி விநியோகிக்க முடியும் என சிப்பேட்கோ நிறுவனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் எரிபொருள் உற்பத்திக்கான வேலைத்திட்டங்கள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றன எனவும் டீசல்,பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலேயே
உற்பத்தி செய்யப்படவுள்ளன.
மேலும்,இறக்குமதி செய்யப்படுகின்ற எரிபொருட்கள் கொலன்னாவ மற்றும் முத்துராஜாவெல எனும் எரிபொருள் முனையங்களில் தரித்து வைக்கப்படும் எனவும் சிப்பேட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.