பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் கைது

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,லசந்த அழகியவண்ண மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் (28.08) மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ணவின் வீட்டிற்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். இவர் மேல்மாகாண வடக்கு பிரிவு அதிகாரிகளால் நேற்றைய தினம் (28.08) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்னாண்டோவின் வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் தங்கொட்டுவ பொலிஸார் மூலம் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply