சவூதி இளவரசருக்கு இலங்கையிலிருந்து எழுத்து மூல செய்தி

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சவூதி அரேபியாவின் இளவரசர் மொஹாம்மட் பின் சல்மானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுத்து பூர்வமான செய்தி கிடைக்க பெற்றதாக சவூதியின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சரான இளவரசர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லாவின் சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல் -குரைஜி  இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவரும் இலங்கையின் சுற்றாடல் அமைச்சருமான நசீர் அஹமத் உடனான சந்திப்பின் போது  இதனை பெற்றுக்கொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் மற்றும் அவற்றை பல்வேறு துறைகளிலும் மேம்படுத்துவற்கான அனைத்து வழிமுறைகளையும் அச்செய்தி உள்ளடக்கியுள்ளது.

Social Share

Leave a Reply