எரிபொருள் விலையானது இன்றைய தினம் குறைவடையும் எதிர்ப்பார்ப்புகள் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதித்துள்ளார்.
இன்றைய தினம் எரிபொருள் விலை சூத்திரம் பயன்படுத்தப்படும் ஆனால் எரிபொருள் விலை குறைவடைய வாய்ப்பில்லை என பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
மேலும் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அவை ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என அரசாங்கம் முன்னரே தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும் எரிபொருள் சூத்திரம் இன்று அமுல்படுத்தப்பட்டாலும் எரிபொருள் விலைக் குறைவிற்கு வாய்ப்பில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
சர்வதேச எரிபொருளின் விலை தற்போது குறைந்துள்ள போதிலும் இலங்கை ஏற்கனவே முன்னைய செலவீனங்களின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்துள்ளதால் எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க முடியாது என அமைச்சர் தெரிவித்ததோடு எரிபொருள் விலை சூத்திரமானது நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்காலத்தில் பொதுமக்கள் சலுகைகளை பெறுவார்கள் என்று நம்புகிறேன் எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.