கடந்த மே 09 ஆம் திகதி நாட்டில் நடைபெற்ற அமைதியின்மையின் போது ஹோகந்தரவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் நேற்று ஹோகந்தர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் 18, 36 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.