மித்தெனியவில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மித்தெனிய சதொஸ்மாதகம எனும் பிரதேசத்தில் நேற்றிரவு (01.09) நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சதொஸ்மாதகம பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த நபர் தனது மனைவியின் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவரது வீட்டிற்கு அருகில் இனம் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து, துப்பாக்கிதாரி அப் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதோடு காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலங்களில் இலங்கையில் அதிகமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version