இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு நாடு திரும்பியிருந்தார் தொடர்ந்தும், இன்று நள்ளிரவு 12.50 மணியளவில் கொழும்பு 07 மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வந்தடைந்தார்.
நேற்றிரவு பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்தை வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கு சொந்தமான SQ 468 என்ற விமானத்தில் அவர் நாடு திரும்பியிருந்தார்.
ஜூலை மாதம் நாட்டை விட்டு மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கிட்ட தட்ட 50 நாட்களுக்கு பிறகு இலங்கைக்கு திரும்பியுள்ளார்.