இலங்கைக்கு 1000 டொன் அரிசியை மியன்மார் நன்கொடையாக வழங்கியுள்ளதாக மியன்மார் அரச செய்தி நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
மியன்மாரின் வர்த்தக நகரமான யாங்கூனில் உள்ள துறைமுகத்தில் இந்த 1000 டொன் அரிசியை இலங்கைக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற விழாவில் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் யு ஆங் நயிங் ஓ இந்த நன்கொடையானது மியன்மார் அரசானது இலங்கை மக்கள் மீது காட்டும் அனுதாபத்தின் அடையாளமாகும் என தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கிடையேயும் நட்புறவையும்,ஒத்துழைப்பையும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் விழாவில் தெரிவித்தார்.
தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்த அரிசி நன்கொடையானது உதவிகரமாக இருப்பதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜே.எம் பண்டார மியன்மார் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.