2022 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சீன மக்கள் வங்கியின் பரிவர்த்தனை வசதி ஊடாக வழங்கப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலரும் உள்ளடங்குவதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.