இந்திய அணிக்கு கோலியின் சதமே ஆசிய கிண்ண பரிசு

-டுபாயிலிருந்து விமல்-

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு அமீரகம், டுபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி அபாரமான வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது. இறுதிப் போட்டிக்கு தெரிவாகி, ஆசிய கிண்ணத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த இந்தியா அணிக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த கோலியின் சதம் பரிசாக கிடைத்துள்ளது.

உலக கிண்ண தொடருக்கு முன்னதாக விராத் கோலி சதமடித்துள்ளமை இந்தியா அணிக்கு மேலும் பலத்தையும் நம்பிக்கையும் வழங்கும். கோலி பெற்றுக் கொண்ட சதத்தின் மூலம் கூடுதலான சர்வதேச சதங்களை பெற்றவர் வரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களையும், ரிக்கி பொன்டிங் 71 சதங்களையும் பெற்றுள்ளனர்.

இரு அணிகளும் இறுதிப் போட்டி வாய்ப்பினை இழந்துள்ள நிலையில் இந்தப் போட்டி எதிர்பார்ப்புகளின்றி நடைபெற்றது. இருப்பினும் விராத் கோலி சதமடித்து ரசிகர்களை சந்தோசப்படுத்தினார்.

இந்த தொடர் முழுவதுமாக அனைத்து அணிகளையும் அச்சுறுத்தி வந்த ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறலாமென்ற ஊகங்கள் காணப்பட்டன. இருப்பினும் விஸ்வரூபம் எடுத்த இந்திய துடுப்பாட்டம், பந்து வீச்சு ஆப்கானிஸ்தான் அணியினை உருட்டி எடுத்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி துடுப்பாட்டத்தில் 212 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விராத் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அபாரமான ஆரம்பத்தை இந்தியா அணிக்கு வழங்கினர். 119 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்றனர். 62 ஓட்டங்களுடன் ராகுல் ஆட்டமிழக்க, விராத் கோலி தொடர்ந்த்தும் அபாரமாக துடுப்பாடினார்.

விராத் கோலி 20-20 சர்வதேச போட்டிகளில் முதலாவது சதத்தை இந்தப் போட்டியில் பூர்த்தி செய்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதிக்கு பின்னர் விராத் கோலி பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.

ஃபசல் ஹக் ஃபரூக்கி ஒரே ஓவரில் அடுத்ததடுத்து விக்கெட்களை கைப்பற்றி இந்தியா அணியினை சிறிய தடுமாற்றத்துக்குக்கு உள்ளாகினர். இருந்தாலும் கோலி தொடர்ந்தும் அதிரடியாக அடித்தாடி இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் ஓரளவு போராடும் என எதிர்பார்த்த நிலையில் மிகவும் மோசமகா தடுமாறியது. புவனேஷ்வர் குமாரின் மிக அபாரமான பந்து வீச்சு ஆப்கானிஸ்தான் அணியினை தடுமாற வைத்தது. 4 ஓட்டங்களை வழங்கி ஐந்து விக்கெட்களை அவர் கைப்பற்றினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஹஸ்ரதுல்லா ஷசாய்L.B.Wபுவனேஷ்வர் குமார்000400
ரஹ்மானுல்லா குர்பாஸ்BOWLEDபுவனேஷ்வர் குமார்000100
இப்ராஹிம் சர்டான்  645942
கரீம் ஜனட்பிடி – விராட் கோலி புவனேஷ்வர் குமார்020400
நஜிபுல்லா சர்டான்L.B.Wபுவனேஷ்வர் குமார்000200
முகமட் நபிL.B.Wஅர்ஷ்தீப் சிங் 070710
அஸ்மதுல்லா ஒமர்சாய்பிடி – டினேஷ் கார்த்திக்புவனேஷ்வர் குமார்010600
ரஷீட் கான்பிடி – அக்ஷர் பட்டேல்தீபக் கூடா 152220
முஜீப் ஊர் ரஹ்மான் BOWLEDரவிச்சந்திரன் அஷ்வின்181321
பரீட் அஹமட்      
       
உதிரிகள்  03   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்111   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்04010405
தீபக் ஷகார்04002800
அர்ஷ்தீப் சிங் 02000701
அக்ஷர் பட்டேல் 04002400
ரவிச்சந்திரன் அஷ்வின்04002701
தீபக் கூடா 01000301
டினேஷ் கார்த்திக்01001800
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
லோகேஷ் ராகுல்பிடி – இப்ராஹிம் சர்டான்ஃபசல் ஹக் ஃபரூக்கி624162
விராட் கோலி  12261114
சூர்யகுமார் யாதவ்Bowledஃபசல் ஹக் ஃபரூக்கி000100
ரிஷாப் பான்ட்  201630
       
       
       
       
       
       
       
உதிரிகள்  02   
ஓவர்  20விக்கெட்  02மொத்தம்212   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஃபசல் ஹக் ஃபரூக்கி04005100
முஜீப் ஊர் ரஹ்மான்04002900
பரீட் அஹமட் மாலிக்04005702
ரஷீட் கான்04003300
முகமட் நபி03003400
அஸ்மதுல்லா ஒமர்சாய்01000800
     

Social Share

Leave a Reply