இங்கிலாந்து மகாராணி எலிசபெத் ii இங்கிலாந்தில் நேற்று(08.09) காலமானதை இங்லாந்து அரண்மனை உறுதி செய்துள்ளது. 96 ஆவது வயதில், ஐக்கிய இராட்சியத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி உலகை விட்டு பிரிந்துள்ளார்.
1952 ஆம் ஆண்டு மாகாராணியாக பொறுப்பேற்ற இவர், 70 வருடங்கள் மகாராணியாக இருந்துள்ளார். அவரின் மறைவை தொடர்ந்து அவரது மகன் சார்ள்ஸ் அரசராக பொறுப்பேற்கிறார். இதன் மூலமாக ஐக்கிய இராட்சியத்துக்கும், 14 பொதுநலவாய நாடுகளுக்கும் இவர் தலைமை ஏற்கிறர்.
பல்மோரல் பகுதியில், வைத்தியர் ஒருவரிடம் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வந்த நிலையில் நேற்று நண்பகல் அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் பலஸ் என அழைக்கைப்டும் அரண்மனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (09.09) மகாராணியின் பூதவுடல் லண்டனுக்கு எடுத்து வரப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராணியின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளான இளவரசர்கள் பிரின்ஸ் மற்றும் ஹரி ஆகியோரும் அந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அரண்மனைக்கு முன்னதாக ஏராளாமான மக்கள் ஒன்று கூடியிருந்ததாகவும், பலர் கண்ணீர் விட்டு அழுததாகவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
பனிப்போர் நிறைவடைந்தனை தொடர்ந்து மகாராணி எலிசபெத் ii, பேரரசு முறையினை மாற்றியமைத்து பொதுநலவாய நாடுகள் எனும் அமைப்பினை உருவாக்கினர். ஐரோப்பிய ஒன்றியத்தினுள் உள் நுழைந்ததும், பின்னர் வெளியேறியதும் இவரது காலப்பகுதியிலேயே நடைபெற்றது.
1874 ஆம் ஆண்டு பிறந்த வின்ஸ்டன் சேர்ச்சில் முதல், இந்த வார ஆரம்பத்தில் பதவியேற்ற லிஸ் ட்ருஸ் வரை 15 இங்கிலாந்துக்கு பிரதமர்களுக்கு மகாராணி எலிசபெத் ii பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இங்கிலாந்து மேபெயர் எனும் இடத்தில் இவர் பிறந்துள்ளார். எலிசபத் அலெக்ஸ்சாண்டரா மேரி விண்ட்சர் எனும் பெயரைக் கொண்ட இவர், 1936 ஆம் ஆண்டு அவரது மாமனார் அமெரிக்க பெண் வல்லிஸ் சிம்சனை மணம் முடித்தமையினால் பதவி துறந்த 10 வயதில் மகாராணியாக முடிசூடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவரது தகப்பனார் அரச பொறுப்பை ஏற்க எலிசபெத் அரியணை வாரிசானர்.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் கடித்த தொடர்புகள் மூலமாக அவரது மைத்துனரும், கிரீஸ் நாட்டின் இளவரசரும் ரோயல் நேவியில் கடமையாற்றியவருமான பிலிப்புடன் காதல் ஏற்பட்டது. 1947 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தமது 74 வருட திருமண வாழ்வே தனது பலமென மகாராணி அவரது கணவர் கடந்த வருடம் இறந்ததன் பின்னர் தெரிவித்திருந்தார்.