ஆசிய கிண்ண மகுடத்தை சூடியது இலங்கை.

-டுபாயிலிருந்து விமல்-

ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்ற இலங்கை, பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

ஆசிய கிண்ண 20-20 தொடரில் முதற் தடவையாக இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஆசிய கிண்ண தொடரில் இலங்கைக்கு இது ஆறாவது கிண்ணமாகும்.

171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பம் முதலே இலங்கை அணி பந்து வீச்சில் அழுத்தம் வழங்க தடுமாறியது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் அடுத்தடுத்து 2 ஆரம்ப விக்கெட்களை இழந்த நிலையில் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த முக்கட் ரிஷ்வான், இப்திகார் அஹமட் ஜோடி நிதானமான துடுப்பாட்டத்தின் மூலமாக ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். இணைப்பாட்டமாக 71 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறான நிலையில் மீண்டும் பந்து வீச அழைக்கப்பட்ட ப்ரோமோட் மதுஷன் இப்திகார் அஹமட்டின் விக்கெட்டினை கைப்பற்றினார்.

தொடர்ந்தும் நிதானம் கலந்த அதிரடியுடன் துடுப்பாடிய முஹமட் ரிஷ்வான் அரைச்சதத்தை பூர்த்தி செய்து பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை வழங்கும் முகமாக துடுப்பாடினார். அவரின் விக்கெட்டினை ஹசரங்க கைப்பற்றியதும், இலங்கை அணிக்கு சார்பாக போட்டி மாறியது. அதே ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்தார் வனிந்து ஹஸரங்க.

கடந்த போட்டியில் அறிமுகம் பெற்று நம்பிக்கையினை வழங்கிய ப்ரமோட் மதுஷன் நான்காவது ஓவரில் தனது முதல் ஓவர் பந்து வீசிய வேளையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பபர் அஸாமின் விட்கெட் அடங்கலாக அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு நம்பிக்கை வழங்கினார். அந்த அழுத்தமே இலங்கை அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது. இவரின் பந்து வீச்சு இலங்கை அணியின் இன்றைய வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

இலங்கை அணியின் தலைமை மிகவும் சிறப்பாக அமைந்தது. தஸூன் சாணக்கவின் பந்துவீச்சு மாற்றங்கள் சிறப்பாக அமைந்தமை வெற்றிக்கு இன்னுமொரு முக்கியமான காரணம்.

இலங்கை அணியின் களத்தடுப்பு மிகவும் சிறப்பாக அமைந்தமையும் சுட்டிக் காட்டத்தக்கதாக அமைந்தது.

இலங்கை அணியின் ஒட்டுமொத்தமான இணைந்த செயற்பாடு, இந்த சம்பியன் எனும் மகுடத்தை சூட காரணமாக அமைந்துள்ளது.

முன்னதாக துடுப்பாடிய இலங்கை அணி மிக மோசமாக தடுமாறி பின்னர் பின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களது சிறந்த துடுப்பாட்டம் மூலம் 170 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் கடந்த போட்டி போன்றே முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் இது மிக மோசமான பின்னடைவாக அமைந்தது. இலங்கை அணிக்காக தொடர்ச்சியாக ஓட்டங்களை குவித்து வரும் பத்தும் நிசங்கவும் சிறிய இடைவெளியில் ஆட்டமிழந்தார்.

இவ்வரனா மோசமான நிலையில் தனுஷ்க குணதிலகவும் தொடர்ந்து ஆட்டமிழக்க இலங்கை அணியின் நிலை முடிந்தது என்ற தருணம் உருவானது. அவ்வாறான நிலையில் பானுக ராஜபக்ஷ களம் நுளைந்து, தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்து இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க தனஞ்சய ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தலைவர் தஸூன் சானாக்க ஆட்டமிழக்க இலங்கை அணியின் நிலைமை படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

முழு நேர துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் பானுக்க ராஜக்ஷவுடன் இணைந்த வனிந்து ஹசரங்க நம்பிக்கை தரும் விதமாக துடுப்பாடி, இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினார். பானுக, ஹசரங்க ஓட்டங்களை உயர்த்தி கொடுக்க இலங்கை அணி மீண்டது.

பானுக ராஜபக்ஷ நுட்பமான தேவையான சிறந்த துடுப்பாட்டத்தை மேற்கொண்டார். மறு புறத்தில் அதிரடியான துடுப்பாட்டத்தை வனிந்து ஹஸரங்க மேற்கொண்டார். ஆரம்பத்தில் அச்சுறுத்திய பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக அதிரடியாக கையாண்ட பானுக-வனிந்து ஜோடி இலங்கை அணியினை நம்பிக்கையான இடத்துக்கு எடுத்து சென்ற வேளையில் வனிந்துவின் விக்கட்டினை ஹரிஸ் ராஃப் கைப்பற்றி 58 ஓட்ட இணைப்பாட்டத்தை முறியடித்தார்.

தொடர்ந்தும் பானுக, சாமிக்க ஜோடி ஒட்டங்களை உயர்த்தியது. சாமிக்க கருணாரட்னவின் நிதானம் கலந்த அதிரடி மேலும் இலங்கை அணிக்கு ஓட்டங்களை உயர்த்தியது. பானுக்க ராஜபக்ஷவின் இரண்டு பிடிகளும் நழுவ விடப்பட இலங்கை அணிக்கு மேலும் நிம்மதி கிடைத்தது. பானுக தனது மூன்றாவது அரை சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நஸீம் ஷா முதல் ஓவரினை அபாரமாக வீசி இலங்கை அணியின் முதல் விக்கெட்டினை கைபப்ற்றி தடுமாறு வைத்தார். அதனை தொடர்ந்து ஹரிஸ் ராஃப் இன் பந்துவீச்சு வேகமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்தது. அவற்றை சாதகமாக பயன்படுத்தி இலங்கை அணியை பாகிஸ்தான் அணி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. முதல் 10 ஓவர்கள் வரையில் முழுமையான அழுத்தத்தில் காணப்பட்ட இலங்கை அணி அதன் பின்னர் ஓரளவு மீண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
முகமட் ரிஸ்வான்பிடி- தனுஷ்க குணதிலக்கவனிந்து ஹசரங்க554941
பாபர் அசாம்பிடி- டில்ஷான் மதுசங்கப்ரோமோட் மதுஷன்050600
ஃபகார் ஷமான்BOWLEDப்ரோமோட் மதுஷன்000100
இப்திகார் அகமட்பிடி- அசேன் பண்டாரப்ரோமோட் மதுஷன்323121
முகமட் நவாஸ்பிடி- டில்ஷான் மதுசங்கசாமிக்க கருணாரட்ன060900
குஷ்தில் ஷாபிடி- மஹீஷ் தீக்ஷனவனிந்து ஹசரங்க020400
ஆஷிப் அலிBOWLEDவனிந்து ஹசரங்க000100
ஷதாப் கான்பிடி- தனுஷ்க குணதிலக்கமஹீஷ் தீக்ஷன080610
நஷீம் ஷாபிடி- பானுக ராஜபக்சப்ரோமோட் மதுஷன்040210
ஹரிஸ் ரவுஃப் BOWLED சாமிக்க கருணாரட்ன 13 09 1 1
மொஹமட் ஹஸ்னைன்       
உதிரிகள்  10   
வெற்றியிலக்கு  171   
ஓவர்  20விக்கெட்  10மொத்தம்147   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுசங்க03002400
மஹீஷ் தீக்ஷன04002501
ப்ரோமோட் மதுஷன்04003404
வனிந்து ஹசரங்க04002703
சாமிக்க கருணாரட்ன04003302
தனஞ்சய டி சில்வா01000400
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி- பாபர் அசாம்ஹரிஸ் ரவுஃப்081110
குசல் மென்டிஸ்BOWLEDநஷீம் ஷா000100
தனஞ்சய டி சில்வாபிடி- இப்திகார் அகமட்இப்திகார் அகமட்282140
தனுஷ்க குணதிலக்கBOWLEDஹரிஸ் ரவுஃப்010400
பானுக ராஜபக்ச  714554
தஸூன்  ஷானகBOWLEDஷதாப் கான்020300
வனிந்து ஹசரங்கபிடி- முகமட் ரிஸ்வான்ஹரிஸ் ரவுஃப்362151
சாமிக்க கருணாரட்ன  141401
மஹீஷ் தீக்ஷன      
அசித்த பெர்னாண்டோ      
       
உதிரிகள்  10   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்170   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
நஷீம் ஷா0400201
மொஹமட் ஹஸ்னைன்04004100
ஹரிஸ் ரவுஃப்04002903
ஷதாப் கான்04002801
இப்திகார் அகமட்03002101
முகமட் நவாஸ்01000300
     

Social Share

Leave a Reply