சுவீடனின் மைய நகரமான கோதன்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பொன்றில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் நடந்த குறித்த குண்டுவெடிப்பு சம்பவத்தினால் அக் கட்டிடத்தின் மீது தீ பரவியதையடுத்து அதில் வசித்த குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் மற்றும் கட்டடத்தின் மேல்த்தளத்தின் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் குறித்த வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் பற்றக்கூடிய பொருள் இருந்திருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைய காலங்களில் சுவீடனில் குழுக்களாக மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் முன்பை விட மிகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

