நச்சு திரிபோஷா – போலியென்கிறார் அமைச்சர்

விநியோகம் செய்யப்பட்ட திரிபோஷா மா தொகுதிகளுக்குள் நச்சுத்தன்மையுடைய இரசாயனம் கலந்துள்ளதாகவும் அவை மீளப்பெறப்படுவதாகவும் பொது பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என சுகாதார துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இன்று(21.09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி கவிரட்ன எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கையிலேயே அமைச்சர் ஹெகலிய இவ்வாறு மறுப்பு தெரிவித்த அதேவேளை, பொது பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹனவிடம் இந்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.

அத்ததோடு விஞ்ஞான ரீதியாக இதனை அவரால் நிரூபிக்க முடியுமாவென மேலும் அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Social Share

Leave a Reply