நாளை(22.09) முதல் மின் வெட்டு நேரத்தை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை பொதுச் சேவைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இதன் காரணமாக நாளைய தினம் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களே மின் தடை அமுல் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை உரிய காரணங்களை முன் வைக்காமையினால் இந்த மின் வெட்டு நேர அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லையென பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.