மனனம் செய்யும் பரீட்சை முறையில் மாற்றம் அவசியம் – கல்வியமைச்சர்

தற்போது நடைமுறையிலுள்ள பரீட்சைகள் முறைமையில் மாற்றம் கட்டாயமானது எனவும், அது தொடர்பில் தான் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று(02.10) நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

மனனம் செய்யும் பரீட்சசை முறையிலிருந்து தொழில்நுப்ட ரீதியான பயிற்சி முறைமை கல்வி திட்டங்களுக்குள் கொண்டுவரப்படவேண்டுமெனவும், அது ஆரம்ப கல்வியிலிருந்து வகுப்பறைகளினூடாக நடைமுறைப்படுத்தப்படவேண்டுமெனவும் கொழும்பு பலக்லைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய கணித வினாவிடை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய பரீட்சசை முறைமையானது அழுத்தம் கூடியதாக காணப்படுவதாக அவர் சுட்டிக் காட்டிய அதேவேளை, கல்வி சீர்த்திருத்தம் மூலமாக இந்த மாற்றங்கள் செயற்படுத்தப்படவேண்டுமென அமைச்சர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

முன்பள்ளியில் சுற்றுச்சூழலை அவதானிப்பதற்கு அதிக இடவசதி உள்ளமையினால், வகுப்பறையில் கேள்விகள் கேட்டு ஆதாரங்களைத் தேடி ஆய்வுசார்ந்த சுயாதீனமான கல்வியில் ஈடுபடுவதன் மூலமாக அறிவினை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆதிகாலத்தில் இவ்வாறான கல்வி முறை காணப்பட்டதாகவும், அதன் மூலமாகவே ருவன்வலி சாய போன்ற விடயங்கள் இலங்கையில் சாத்தியமானதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் இது போன்ற அவதானிப்பு மற்றும் ஆராய்ச்சி மூலமான கல்வி திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply