வவுனியாவுக்கு பைசர் தடுப்பூசிகள் நாளை கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பைசர் தடுப்பூசிகள் 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நீண்ட நாள் நோயுடையவர்கள், இருதய நோயுடையவர்கள், மற்றும் இலங்கை சுகாதர அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய விசேட வைத்திய நிபுணர்களின் சிபாரிசுக்கு இணங்க இத்தகடுப்போசிகள் வழங்கப்படும்.
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் விசேட சிறுவர் வைத்திய நிபுணர்கள் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
இந்த வயது பிரிவினர் தவிர்ந்த வேறு யாருக்கும் பைசர் தடுப்பூசிகள் வழங்கபபடமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்விக்காக வெளிநாடு செல்பவர்கள் கொழும்பு, நாரஹேன்பிட்டிய இராணுவ தலைமையகத்தை தொடர்புகொண்டு, வெளிநாடு செல்வதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் காண்பித்து தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்று கொள்ளலாம்.
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையங்களில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறும்.
