கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதோடு
சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்பபடுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனம் அங்கத்தவர்கள், மற்றும் சட்ட விரோத தொழிலில் ஈடுபடுவோர்களை சந்தித்து கலந்துதுரையாடியுள்ளார்.
“எங்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிகாரிகளை மாற்றம் செய்யவேண்டும் என கோரினோம். முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிக்கு மாற்றம் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதிதாக வரவுள்ள அதிகாரிக்கு ஆதரவாக நாங்கள் அனைவரும் ஒத்து நிற்போம்.
சட்டவிரோதமான தொழில் செய்பவர்ளும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள் அவர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ள விடயம் சட்டவிரோதமான தொழில் செய்யமுடியாது என்றும் 28 பேருக்கு இரண்டரை ஒன்றரை இஞ்சி வலை பாவித்து பகலில் தொழில் செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விட சட்டவிரோமான தொழில் செய்தால் கைதுசெய்யப்படுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது” என ஊடக சந்திப்பு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன தலைவர் அ.அருள்நாதன் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“2023 ஆண்டாவது ஒட்டுமொத்தமாக சட்டவிரோத தொழில் இல்லாமல் செய்யவேண்டும். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிபாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேலும் இரண்டு அரச உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நாங்கள் வைத்த கோரிக்கைக்கு அமைய சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த ஏனைய இரண்டு அதிகாரிகளையும் மாற்றம் செய்யவேண்டும் அதனையும் அமைச்சர் செய்து தருவாரென நம்புகின்றோம். இலங்கையில் இருக்கும் அனைத்து மாவட்ட சிறுபான்மை மக்களும் சட்டவிரோத தொழில் நடவடிக்கையினை எதிர்கின்றார்கள் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.
எங்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளது இனிவரும் அதிகாரிகளுடன் மீனவ சமூகங்கள் ஒன்றிணைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையினை இல்லாமல் செய்யவேண்டும் இல்லாமல் செய்வதனாலாயே மீனவர்களின் வாழ்வாதரம் மேற்கொள்ளமுடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கடற்தொழிலாளர்களின் போராட்டம் 06 ஆம் திகதி பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக போராட்டத்தினை கைவிடப்பட்டது. பணிப்பாளர் நாயகத்தின் விசாரணைக்குழுவிடம் மீனவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளதுடன் 12 ஆம் திகதி சரியான முடிவு கிடைக்கப்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.