ICC T20 உலக கிண்ண தொடரின் இரண்டாம் நாளில் முடிவுகள் எதிர்பாராத விதமாக அமைந்துள்ளன. முதற் போட்டியில் ஸ்கொட்லாந்த்து, மேற்கிந்திய தீவுகள் அணியினை வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் அயர்லாந்து அணிக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சிம்பாவே அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இதில் சிகண்டர் ரஷா 82 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். வெஸ்லி மதேர்வ் 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் ஜோஸ் லிட்டில் 3 விக்கெட்களையும், மார்க் அடைர், சிமி சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றது. இதில் கேர்ட்டில் கம்ப்ஹெர் 27 ஓட்டங்களையும், ஜோர்ஜ் டொக்ரொல், ஹரித் டெலினி ஆகியோர் தலா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பிளெஸ்ஸிங் முஷாரபாணி 3 விக்கெட்களையும், ரிச்சட் நகரவா, ரெண்டாய் சட்டாரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
குழு B இல் ஸ்கொட்லாந்து முதலிடத்தையும், சிம்பாவே அணி இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.
அயர்லாந்து
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | கைவிட | புள்ளி | ஓ.நி.வே | |
1 | ஸ்கொட்லாந்து | 01 | 01 | 00 | 00 | 02 | 2.100 |
2 | சிம்பாவே | 01 | 01 | 00 | 00 | 02 | 1.550 |
3 | அயர்லாந்து | 01 | 00 | 01 | 00 | 00 | -1.550 |
4 | மேற்கிந்திய தீவுகள் | 01 | 00 | 01 | 00 | 00 | -2.100 |